×

பக்தர்கள் தரிசனத்துக்காக அயோத்தியில் 2023ம் ஆண்டு ராமர், சீதை சிலை நிறுவப்படும்: தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்தி: ‘அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் வரும் 2023ம் ஆண்டு நிறுவப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்,’ என்று ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கோயில் கட்டுமான பணிகளை ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள இடங்களும் தற்போது வாங்கப்பட்டு, ₹2000 கோடியில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினரான அனில் மிஸ்ரா நேற்று கூறுகையில், ``அயோத்தியில் வைத்து வழிப்பட்டு வந்த ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள், தற்காலிக இடத்தில் வைத்து தரிசிக்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டிற்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் புதிய கருவறையில் இந்த சிலைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்,’’ என்றார். கோயில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கோயில் கருவறையை விரைவில் திறக்கும்படி மேலிட உத்தரவுகள் வந்துள்ளதை தொடர்ந்து, கருவறை அமைக்கும் பணி முடுக்கி விட்டுள்ளது.

ஏன் இந்த அவசரம்?
`அயோத்தியில் ராமர்  கோயில் கட்டியே தீருவோம்’ என்பது பாஜ.வின் பல கால தேர்தல் வாக்குறுதியாக  இருந்து வருகிறது. இந்நிலையில், ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி  அமைந்துள்ள உத்தர பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத்  தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்தலும்  நடைபெறுகிறது. இதனால், இந்துக்களின் வாக்குகளை குறி வைத்து, ராமர்  கோயில் கட்டுமான பணிகளை பாஜ முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக, உபி தேர்தலை மனதில் கொண்டு கருவறை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோயிலை கட்டுவதற்கான  ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்ட் டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள்  2024ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளன.

Tags : Ramas ,Shetra , Devotees, Ayodhya, Rama, Sita statue, Tirtha Shetra Foundation
× RELATED அயோத்தியில் வரும் 22ல் நடைபெறும் ராமர்...